Wednesday, October 13, 2021

பொதுத்துறை, தனியார்துறை வித்தியாசம்.



ஒரு ஊரில் தமன்னா நகர்,

நயன்தாரா நகர் என இரு பகுதிகள்...


தமன்னா நகரில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் ஒரு  கடையை ஆரம்பித்தார். காலை 6.00 மணிக்கு அவரது மனைவி ஷாலினி கடையைத் திறந்து வைப்பார். காலையில் பால் பாக்கெட் வியாபாரம் நடக்கும். அதற்குள் மார்க்கெட் சென்று  அஜித் காய்கறி வாங்கி வந்து விற்க ஆரம்பிக்க மனைவி ஷாலினி சமைத்து வர வீட்டுக்குப் போவார். பின் மனைவி  மதியம் வந்து கடையைப் பார்க்க சிறிது ஓய்வுக்குப் பின் கணவன் அஜித் வர, மனைவி ஓய்விற்குச் செல்ல....மாலை கணவன் மனைவி இருவரும் இணைந்து வியாபாரத்தைக் கவனிக்க...சுறுசுறுப்பும் நேர்மையும் பணிவும் #வியாபாரத்தில் அவர்களுக்கு

#வெற்றியைத் தந்தது. பிழைக்க வந்த ஊரிலே அவர்கள் நாலு வீடு வாங்கினார்கள்... இருப்பினும் தொழில் அதே போலவே.....

இது கற்பனைக்கதை அல்ல. உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த கதை தான்.பார்த்த நபர்கள் தான்.


சரி,

நயன்தாரா_நகருக்கு வருவோம். அங்கே மளிகைக் கடை கிடையாது. மக்களுக்குச் சேவை செய்ய அரசு மளிகைக்கடை ஆரம்பித்தது. 


இரு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். யூனியன் சொன்னது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, ஒரு மணி நேரம் ஓய்வு என்று... 


எனவே கடை காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது. மற்றொரு நபர் மார்க்கெட் சென்று காய்கறி வாங்கப் போவார். அதிகாலையில் விற்றது போக மீதி காய்ந்த காய்கறிகள் கடைக்கு 1 மணிக்கு வரும். 1மணி முதல் 2 மணி வரை லஞ்ச் இடைவேளை.

அதற்குள் ஏரியா பெண்கள் குழம்பு வைத்து பசி ஆறி இருப்பர். வியாபாரம் நடக்குதோ இல்லையோ 6 மணிக்குக் கடையைப் பூட்டி விட்டுக் கிளம்பி விடுவார்கள். 


இதில் பணம் வாங்க என பெண் பணியாளர் ஒருவரை அரசு நியமித்தது. 

கடையை யார் கூட்டுவது என்பது சண்டையாகி யூனியன் மூலம் சமாதானமாகி துப்புறவுத் தொழிலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இப்போது நான்கு ஊழியர்கள். கடைக்கு வந்த பெண்ணை எடை போடுபவர் காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் HRA வீட்டு அலவன்ஸ் அரசு தந்தது. ஒரே வீட்டில் இருவரும் இருந்தனர்.

பெண் பணியாளருக்குக் குழந்தை பிறந்ததால் 9 மாதம் விடுப்பு அரசு தந்தது. இதற்கு மாற்றாக வரும் நபர் மாலை மட்டுமே வருவதால் 9 மாதங்களும் மாலை மட்டுமே வியாபாரம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது...


தமன்னா நகர் , நயன்தாரா  நகருக்கு அருகே இருந்ததால் இந்த நகர மக்கள் அங்கே சென்று காய்கறி மளிகை சாமான்களை வாங்கிக்கொண்டனர். 


அரசு மளிகைக்கடை பெரும் நட்டத்தைச் சம்பாதித்தது.ஊழியர்களுக்குச் சம்பளம் தரமுடியவில்லை. கடையை 

மூடலாம் என அரசு முடிவெடுத்த போது அந்த அரசுமளிகைக்கடையின் ஊழியர்கள் சொன்னார்கள்:

"நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம். கடையை மூடக்கூடாது"...


புரிந்ததா...?


பொதுத்துறை, தனியார்துறை வித்தியாசம்.

அவ்வளவுதான்...!


ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியதால் ஏற்படப்போகும் மாற்றத்தை உணரலாம்... 


அரசு ஏரோப்ளேனை என்ன,

 ரிக்‌ஷாவை ஓட்டினாலும் நட்டம்தான் வரும்...

No comments:

Post a Comment